Monday, December 24, 2007

இராப் பத்து ஐந்தாம் நாள்

சத்ய நாராயணப் பெருமாள் வைகுண்ட நாதர் திருக்கோலம்


திருவாய்மொழித் திருநாளின் ஐந்தாம் இரவு மாதர் மண் மடந்தை பொருட்டு ஏனமாய் அகலிடங்கீண்ட பெருமாள் திருமுன் எங்கும் எதிலும் கண்ணன் என்று மாலும் குருகூர் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் " ஐந்தாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இந்த பத்தில் எம்பெருமானது அருளுடைமை( காருணித்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.



நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்


எங்ஙனே சொல்லுகேன்? யான் பெற்ற ஏழையை


சங்கென்னும் சக்கரமென்னும் துழாயென்னும்


இங்ஙனே சொல்லும் இராப்பகலென் செய்கேன்





என்று பராங்குச நாயகியாய் உருகும் நம்மாழ்வார்





போற்றிக் கைகளாற் தொழுது சொல்


மாலைகள் ஏற்று நோற்பவர்களுக்கு எந்த


குறைவுமில்லை எழு பிறப்பும் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.





சடகோபரின் சிறப்பைக் காண விழைந்த திருமாலடியார்களான நித்திய சூரிகள் முதலியோரைக் கண்டு





பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்


நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை


கலியுங் கெடுங் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்


மலியப் புகுந்திசை பாடி ஆடியுழி தரக் கண்டோம். என்று வாழ்த்தினார். பின்பு வைணவம் தழைக்க இராமானுஜர் தோன்றவிருப்பதை பொசிந்து காட்டுவதலென்கிற முறையில் அறிவுறுத்தியதாகவும் இவ்வாழ்த்தை பெரியோர் கொள்வர்.





கவியரசரான கம்பர் தமது இராம காதையை திருவரங்கத்தில் நம் பெருமாள் முன்பு அரங்கேற்றப் புக, " நம் சடகோபனைப் பாடினையோ?" என்று பெயர் பெற்று இப்பெயரையே புகழ் பெற்ற பெயராக கொண்டுள்ளார்





உறங்குவான் போலும் யோகு செய்த பெருமானை





ஆராவமுதே!





ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர் கைம்


மாறொன்றிலேன் எனதாவியும் உனதே..... என்று சிரீவரமங்கல நாயக தெய்வ நாயகரிடம் பூரண சரணாகதி அடைந்த நம்மாழ்வார்.

கேசவப் பெருமாள் இன்று நந்தகுமாரன் திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

No comments:

More than a Blog Aggregator