Friday, December 28, 2007

இராப் பத்து ஒன்பதாம் நாள்



ஸ்ரீ:


சத்ய நாராயணப் பெருமாள் வேணு கோபாலன் திருக்கோலம்



திருவாய்மொழித் திருநாளின் ஒன்பதாம் சரணமாகும் தனதாளடைந்தார்க் கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரானடி மேல் சடகோபன் சொன்ன பண்ணார் தமிழ் ஆயிரத்துள் " ஒன்பதாம் பத்தின் நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. இந்த பத்தில் எம்பெருமானது உதவி (ஆபத்ஸ்கத்வம்) கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

உடலின் முடிவில்தான் வீடு எனவே உடலுறவினர்களை விட்டு உய்விக்கும் திருமால் அடி சேர வலியுறுத்துகின்றார் நம்மாழ்வார் இப்பத்தில்.

அறிந்தனரெல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்களறுக்கும் மருந்தே
இன்றிப் போக இருவிணையும் கெடுத்து
ஒன்றியாக்கை புகாமை உய்யக் கொள்வான் என்று எம்பெருமானுக்கு அடிமை செய்ய வைகுந்தம் தந்தருள்வான் என்று அறிவுறுத்துகின்றார் ஆழ்வார்.

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே!
வெய்யார் சுடராழி சுரி சங்கமேந்தும்
கையா! உன்னைக் காணக் கருதும் என் கண்ணே

என்று திருமாலின் அடி சேர மாலும் பராங்குசர் எம்பெருமான் தம்முள் கலந்த பின்
எவை கொல் அணுகப் பெருநாள்? என்று எப்போதும்
சுவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கழல்வன்
அந்தோ! அணுகல் பெறு நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கி
என்று
வைகுந்தத்தின் வாசலில் நிற்கின்றார்.

No comments:

More than a Blog Aggregator